சில்லி சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
மிஞ்சிய சப்பாத்தி - 4 அல்லது 5,
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
குடைமிளகாய் - பாதி (விருப்பப்பட்டால்),
தக்காளி சாஸ் (Ketchup) - 1 மேசைக்கரண்டி,
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு.
செய்முறை:
சப்பாத்திகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு கடாயில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.வறுத்து வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, சாஸ் அனைத்து சப்பாத்திகளிலும் படுமாறு நன்கு கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி சாப்ட் ஆகும் வரை 2 நிமிடம் மூடி வைத்து, இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சப்பாத்திகளை முன்கூட்டியே வறுத்து சேர்ப்பது சில்லி சப்பாத்திக்கு மொறுமொறுப்பான தன்மையைத் தரும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.மிஞ்சிய சப்பாத்திகளைப் பயன்படுத்தி 10 நிமிடங்களில் சுவையான சில்லி சப்பாத்தி செய்யலாம்.
0
Leave a Reply