சில்லி மஷ்ரூம் செய்முறை (Chilli Mushroom)
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்,
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
கார்ன் பிளவர் (சோள மாவு) - 3 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது),
வெங்காயம் - 1 (நறுக்கியது),
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
காளானை நன்றாகக் கழுவி, பாதியாக அல்லது நான்காக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காளான், மைதா, கார்ன் பிளவர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்புசேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். காளானில் உள்ள ஈரப்பதமே போதுமானது.
எண்ணெயைக் சூடாக்கி, பிசைந்த காளான்களைக் குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வதக்கி, பொரித்த காளான்களைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். மொறுமொறுப்பு குறையாமல் இருக்க, சாப்பிடுவதற்கு சற்று முன்பு சாஸ் சேர்த்து கிளறவும்.
0
Leave a Reply