25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருக லவங்கப்பட்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருக லவங்கப்பட்டை.

 லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி - ஒரு தேக்கரண்டி, தேன் - ஒரு தேக்கரண்டி, சுடு தண்ணீர்-இரண்டு தேக்கரண்டி சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும்.

லவங்கப் பவுடர்,இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்.சுத்தமான தேன்ஒரு மேஜைக்கரண்டி.. லவங்கப்பட்டை பவுடர்ஒரு தேக்கரண்டி கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், இரண்டு வாரங்களில் முகப்பரு மறைந்து விடும்.

லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்.சூடான தேன்- ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர்- நான்கு தேக்கரண்டி கலந்து, காலை,மாலை என, மூன்று நாட்களுக்குசாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்.

லவங்க பவுடர், தேன் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால் வலி நீங்க விடும்.வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்.தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்.

தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். லவங்க பவுடர்- ஒரு சிட்டிகை, தேன் அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News