மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் 17.02.2026-அன்று நடைபெறவுள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் - 626002. தொலைபேசி எண். 04562 - 244707, 9943053799, 8608011144, 9894893219,
மின்னஞ்சல் முகவரி: adfisheriesvnr@gmail.com என்ற முகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply