25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


திணைக் கிச்சடி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திணைக் கிச்சடி .

 தேவையான பொருட்கள் - 
1கப்திணை,அரைக்கப் பாசிப்பருப்பு,
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்,2டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள்,
10சாம்பார் வெங்காயம்,6 பல் பூண்டு,
1பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது,அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
தேவையான அளவு உப்பு, 2டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்,
1டேபிள் ஸ்பூன் நெய்,5முந்திரி,
2டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,சிறிது கறிவேப்பிலை,
அரை டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு.


செய்முறை - 
திணையை நன்கு கழுவ 1மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் 41/2கப் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் தினை, பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும்.
இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, பாதியளவுகொத்தமல்லித்தழை, 2டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
பாதியாகக் குறைந்ததும் மூடி 1விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 - 8நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஸ்டீம் அனைத்தும் அடங்கிய பின் தாளிப்புக்கரண்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரியைவதக்கி குக்கரில் போடவும். பின் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொட்டி கிளறினால் மிகவும் சுவையான திணைக் கிச்சடி ரெடி. அப்பளம், உருளை கிழங்கு சிப்ஸ் வைத்துப் பறிமாறலாம்.
சிறுதானிய உணவுகள் மிகவும் சிறப்பானவை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News