25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சிவகாசி  மாநகராட்சிக்குட்;பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மாநகராட்சிக்குட்;பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (20.02.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இரயில்வே பீடர் சாலையில், சிறு பாலம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் குறித்தும், ஹட்சன் பிளாட் சாலையில் உள்ள தெருவிளக்குகள் குறித்தும், முஸ்லீம் தெருவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தினையும், வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள நான்கு முக்கு பகுதியில் சாலை அகலப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திடக்கழிவு மேலாண்மை,  கழிவு நீர் வடிகால், பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்வது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News