25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ்  மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழா

விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்(10.05.2025) வேளாண்மைத்துறை சார்பில்  உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு இயக்கம் - சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ்  மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவினை   சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் என்பது சிறுதானியங்களுக்கு புகழ்வாய்ந்த மாவட்டம் ஆகும். ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபதாயிரம் ஹெக்டர் பரப்பளவில் 52854 ஹெக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சோளம் 11,040 ஹெக்டர், கம்பு 1765 ஹெக்டர், வரகு 265 ஹெக்டர், குதிரைவாலி 1514 ஹெக்டர், மக்காச்சோளம் 38,257 ஹெக்டேர் பயிரிடப்பட்டு வருகிறது.  சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை அனைவரும் அறிந்திடும் நோக்கில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சத்துமிகு தானியங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களின் முக்கியத்துவத்தினை உணர்த்திடும் வகையில் மாவட்ட அளவில் சிறுதானியங்கள் திருவிழா  ஒவ்வொரு மாவட்டத்திலும்   நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய திருவிழா  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா அவர்கள் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி.ஆ.நாச்சியார் அம்மாள் அவர்கள் திட்டம்  தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊட்டச்சத்தினால் ஏற்படும் நன்மைகள், சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்திடும் நோக்கத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் முனைவர் செல்வி இரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஆ.ஷீபா அவர்கள், இணைப்பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்),வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஜட்டாகவிதா, இணைப்பேராசிரியர் (பூச்சியியல் துறை) வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பற்றிய தொழில் நுட்ப கருத்துக்களை மிக தெளிவாக எடுத்துரைத்தனர்.

 விருதுநகர், வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) திருமதி.மு.சுமதி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) திருமதி.ல.முத்துலட்சுமி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சிநிலையம்) திருமதி.ஆர்.லதா அவர்கள், விதை ஆய்வு துணை இயக்குநர் திருமதி.த.வளர்மதி அவர்கள் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி.எம்.செல்வி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நுட்ப உரையாற்றினர்.
சிறுதானியங்கள் உற்பத்தியில் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனப் பிரதிநிகள் தங்களது வேளாண் சம்மந்தப்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர்.
சிறுதானிய மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சிறுதானியங்கள் திருவிழாவில் அமைக்கப்பட்ட கருத்துக் காட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சிகளை  விவசாயிகள் பார்வையிட்டு விவசாயிகள் தங்களது சந்தேகத்தினை கேட்டு தெளிவு பெற்றனர்.இறுதியாக அருப்புக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ப.சுந்தரவள்ளிஅவர்கள் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வேளாண்மைத்துறையிலுள்ள அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள், மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களிலிருந்து சுமார் 1000 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News