முட்டை பிரியாணி.
தேவையான பொருட்கள் –
பாசுமதி அரிசி - 2 கப்,வேகவைத்த முட்டை – 4,பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது),தக்காளி - 2
(பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்,தயிர் - அரை கப்,பச்சை மிளகாய் – 3,புதினா,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,மல்லித்தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால்
ஸ்பூன்,பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு,நெய் மற்றும் எண்ணெய் - தேவையான அளவு,உப்பு -
தேவையான அளவு.
செய்முறை -
அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மசிய வதக்கவும்.
தயிர் மற்றும் மசாலா தூள் வகைகளைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்.
சாதம் வெந்ததும், லேசாக கீறி வதக்கிய வேகவைத்த முட்டைகளை மேலே வைத்து பரிமாறவும்.
0
Leave a Reply