25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் நோக்குடன், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.டி.ஐ. மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் செய்தி பிரிவுகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.இந்த உரிமத்தைப் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ஏர்டெலின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேட்டிலைட் பிரிவு மட்டுமே இதற்கான அனுமதியுடன் செயல்பட்டுவந்தன.

 புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில், விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில் சோதனை அலைக்கற்றை (trial spectrum) ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்தை நாடி காத்திருந்த ஸ்டார்லிங்கிற்கு இது ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது

இந்த அங்கீகாரத்துடன், இந்தியாவிலேயே விரைவில் அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கலாம். நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கையை தொழில்நுட்பத் துறையினர் வரவேற்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News