25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI)   தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI)  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை)  - 1299 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை  01.04.2025 அன்று  வெளியிடப்பட்டு, இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் தகுதித் தேர்வு 21.12.2025 அன்று நடைபெற உள்ளது.

 இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு, இதற்கான குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் 17.11.2025 (திங்கள் கிழமை) முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவிருக்கிறது. 

 இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும், வாராந்திர இலவச மாதிரித் தேர்வுகளும்,  தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். இப்பயிற்சி  வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.

 மேலும், விவரங்களை  studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.    எனவே, TNUSRB - SI  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News