நல்ல தூக்கம்... நல்ல ஆரோக்கியத்தின் ரகசியம்!
தினமும் போதுமான அளவு தூங்குவது உடல் மற்றும் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இளம் வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்தது 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களின் இதயத் துடிப்பு சீராக இருப்பதோடு, நினைவாற்றல், கவனத்திறன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனும் சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், போதிய தூக்கம் பெறும் மாணவர்கள் கல்வியிலும் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. எனவே உடல் வளர்ச்சிக்கும், மனநலத்திற்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் தினமும் போதுமான நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.
0
Leave a Reply