பச்சை பட்டாணி வடை.
தேவையான பொருட்கள்:
1/4 கிலோ பச்சை பட்டாணி,1 பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகாய்,
1 துண்டு இஞ்சி,6 பல் பூண்டு,1 வரமிளகாய்,1ஸ்பூன் கடலை மாவு,
1ஸ்பூன் அரிசி மாவு,1ஸ்பூன் சோம்பு,1/2 லிட்டர் எண்ணெய்,
தேவையான அளவுஉப்பு,சிறிதளவு கொத்தமல்லி,1 கொத்துகருவேப்பிலை.
செய்முறை :
முதலில் பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்ததும் ,அதை
மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பிறகு அதில் சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாயை, இஞ்சி, கடலை மாவு, அரிசி மாவு,
வரமிளகாய், பூண்டு,கொத்தமல்லி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து
பிசைந்து கொள்ளவும்.பிறகு அதை வடை போல் தட்டவும்.பிறகு வாணலியில் எண்ணெய்
சேர்த்து, அதில் வடையை போட்டு எடுக்கவும்.இப்பொழுது சுவையான பச்சை பட்டாணி
வடை தயார்.
0
Leave a Reply