25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பச்சை பட்டாணி சேமியா உப்புமா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சை பட்டாணி சேமியா உப்புமா.

தேவையான பொருட்கள்:
சேமியா (வறுத்தது) - 1 கப்,பச்சை பட்டாணி - 1/4 கப்,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1,தக்காளி (நறுக்கியது) - 1 (விருப்பப்பட்டால்)
கேரட், பீன்ஸ் - சிறிதளவு (நறுக்கியது),பச்சை மிளகாய் – 2,இஞ்சி - 1 சிறிய துண்டு,
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.,எண்ணெய்/நெய் - 2
டேபிள் ஸ்பூன்.
தண்ணீர் - 1.5 முதல் 2 கப் வரை (1 கப் சேமியாவிற்கு),
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
சேமியா வறுக்கப்படாவிட்டால், சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும்
வரை வறுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள்
(கேரட், பீன்ஸ்) மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
1 கப் வறுத்த சேமியாவிற்கு, 1.5 முதல் 2 கப் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு
உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், வறுத்த சேமியாவைச் சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் வைத்து, வாணலியை மூடி 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும் .(தண்ணீர்
வற்றும் வரை).
தண்ணீர் வற்றி சேமியா வெந்ததும், அடுப்பை அனைத்து, சிறிது நெய் மற்றும்
கொத்தமல்லி இலைகள் தூவி சூடாகப் பரிமாறவும்.
உதிரியான உப்புமா கிடைக்க, சரியான அளவு தண்ணீர் (1:1.5 விகிதம்) பயன்படுத்துவது
அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *