உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி 5வது இடம்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி 5வது இடத்தைப் பிடித்தது. 5-6வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 16வது சீசனில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5வது இடத்தை உறுதி செய்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணியின் 2வது சிறந்த செயல்பாடாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு 1974ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 4வது இடம் பிடித்திருந்தது.
0
Leave a Reply