2-ஆம் உலகப்போர் பின்னணியில் உருவாகியுள்ள 'டெத் ரயில்வே'.
'யாத்திசை' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டெத் ரயில்வே'.
இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் நாட்டினர் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பர்மா மற்றும் தாய்லாந்துக்கு இடையே அமைத்த ரயில் பாதையின் வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
0
Leave a Reply