25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (28.11.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத வைப்புத் தொகைக்கான தீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், இந்த முகாமானது 04.10.2025 முதல் 31.12.2025 வரை 3 மாதங்கள் நடைபெறும். வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்பு தொகையாளர்கள் மற்றும் இறந்த வைப்பு தொகையாளர்களின் வாரிசுகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையினை வட்டியுடன் பெறலாம்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத சுமார் 3,48,662 கணக்குகளில் ரூபாய் 66.48 கோடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 364 கணக்குகளில் ரூபாய் 67.78 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 எனவே, பொதுமக்கள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் இருப்பினை www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, அப்பணத்தை வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ரா.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News