கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
கோடைக்காலத்தில் வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம் ,அதிகளவு நீர் இழப்பு ஏற்படுகிறது. உண்ணும் உணவின் மூலம்
நீரைபெற்றாலும், உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய அதுபோதுமானது இல்லை. நமது உடல்60 சதவீதம் தண்ணீரால் நிறைந்துள்ளது.
மனித மூளையில்,நடுமூளை மற்றும் பின்மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் அமைந்துள்ளது. 'ஹைபோதாலமஸ்' தாக உணர்வை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு மூளையில் தாக மையத்தின் தூண்டல் குறைவாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு அதிகம் இருக்காது. கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாகி விட்டதால் பெற்றோர் தங்களின், குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
தண்ணீர் பற்றாக் குறைஉடலின் சமநிலையை சீர்குலைத்து பலவீனம்,சோர்வு, மலச்சிக்கல், தலைச்சுற்றல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே1 முதல் 3 வயதுள்ள குழந்தைகள் தினமும் 1லிட்டர் நீரும்,4 முதல் 8வயதுள்ளவர் கள் ஒருநாளைக்கு 1.1 முதல் 1.3 லிட்டர் நீரும்,9 முதல் 13வயதுள்ளவர்கள் தினமும் 1.3முதல் 1.5 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் என தரவுகள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply