25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சாலைப்பாதுகாப்பு மாதம் -2026 முன்னிட்டு,இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலைப்பாதுகாப்பு மாதம் -2026 முன்னிட்டு,இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -2026 (01.01.2026 முதல் 31.01.2026 வரை) முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (07.01.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 மேலும், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -2026 முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கி,  முக்கிய சாலைகள், வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுநகர்புதியபேருந்துநிலையம்வரைசென்றுநிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உட்பட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News