மாலத்தீவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.
வங்கதேசத்தில் 15-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மாலத்தீவும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திய சுஹைல் அகமது பாட் அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply