சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்க்கும் 'வன மடி'.
பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'வன மடி'. முற்றிலும் புதுமுக நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் 7 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
"இப்படம் இயற்கை சம்பந்தப்பட்டது. தாய் மடி என்பது போல 'வன மடி' என்ற தலைப்பை வைத்துள்ளோம். இது எதிர்கால தலைமுறைக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்குமான மிக முக்கியமான படம்" — இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.
0
Leave a Reply