மம்முட்டியின் 'படயாத்ரா' டிசம்பர் 4-ல் ரிலீஸ்.
மலையாளத்தில் பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'படயாத்ரா'. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார்.முன்னதாக, இவர்கள் கூட்டணியில் வெளியான 'மதிலுகள்' மற்றும் 'விதேயன்' ஆகிய திரைப்படங்களுக்காக மம்முட்டி சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply