துப்பாக்கிச் சுடுதல் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய வீரர் நிராஜ் குமார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் (ரைபிள் / பிஸ்டல் / ஷாட்கன்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் நிராஜ் குமார் (591.29 புள்ளிகள்) முதலிடத்தையும், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (586.27 புள்ளிகள்) நான்காவது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட நிராஜ் குமார், 346.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
0
Leave a Reply