25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீராங்கனைகள்  ஆசிய குத்துச்சண்டையில்  - தங்கம் வென்றனர்.!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனைகள்  ஆசிய குத்துச்சண்டையில் - தங்கம் வென்றனர்.!

மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை   தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 

ஆசிய விளையாட்டு போட்டியில் ,54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங்சியாயோவென்னை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 இந்தியாவின் பிரியா 60 கிலோ எடைப்பிரிவில், 3-0 என்ற கோல் கணக்கில்வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 

உலக  கோப்பை போட்டியில், 70 கிலோ எடைப்பிரிவில்,  தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசைதோற்கடித்து தங்கப்பதக்கத்தைதனதாக்கினார்.

இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை  பெண்கள் பிரிவில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News