25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மூன்றுதங்கம் வென்ற முதல் வீராங்கனை ,என பெருமை பெற்றார்  இந்தியாவின் ஜோதி சுரேகா!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மூன்றுதங்கம் வென்ற முதல் வீராங்கனை ,என பெருமை பெற்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா!

  ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்  ,வங்கதேசத்தின் தாகாவில் தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டி நடந்தன. இதன் அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, 149-143 என தென் கொரியாவின் சி யு செனை வீழ்த்தினார்.பைனலில் ஜோதி, சக வீராங்கனை பிரித்திகா மோதினர். இதில் ஜோதி 147-145 என வென்று, தங்கம் கைப்பற்றினார்.கடந்த 2015, 2021, தற்போது 2025 என ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை என பெருமை பெற்றார் ஜோதி.

இந்தியாவின் தீப்ஷிஹா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில்  தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 236-234 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது.

காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை எதிர் கொண்டது.இதில் இந்தியா 153-151 என வென்று, தங்கம் கைப்பற்றியது.

 பிரிவில் இந்தியாவின் அபி ஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி, ஆண்களுக்கானகாம்பவுண்டு அணிகள் பிரிவில் பைனலில் 229-230 என கஜகஸ்தானிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News