25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீராங்கனை சிந்து காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பாட்மின்டன் போட்டிகளில் இருந்து விலகினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை சிந்து காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்த ஆண்டுக்கான மீதமுள்ள பாட்மின்டன் போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை  சிந்து ,ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண் கலம்), உலக சாம்பியன் ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.  

இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், சீன மாஸ்டர்ஸ் தொடர்களில் காலிறுதி வரை சென்ற இவர், ஒரு சாம்பியன் பட்டம் கூட வெல்லவில்லை. கடைசியாக, கடந்த டிசம்பரில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்றிருந்தார்.காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள  சிந்து, இந்த ஆண்டு நடக்கவுள்ள மீத முள்ள பி.டபிள்யு.எப்., டூர் தொடர்களில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். 

சிந்து கூறுகையில், "காயம் முழுமையாக குணமடையாததால், நடப்பு சீசனில் இருந்துபாதியில் விலக நேரிட்டது. எனது பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினருடன்ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளேன்.காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான பயிற்சியை ஏற்கனவே துவக்கிவிட் டேன். முழு உடற்தகுதியுடன் புதிய சீசனில் கள மிறங்குவேன்," என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News