25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (18.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S , அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஆ.ப., அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை படிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நன்றாக படித்து அவர்களுடைய குடும்பங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், குடும்ப சூழ்நிலை, உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் தேர்ச்சி பெற முடியாமலும், தனித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்களுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கி வருகிறது

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் படிக்க விருப்பமுள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் எந்த  சூழ்நிலையிலும் படிப்பை தொடர முடியாமல் இருக்கக்கூடாது என்பது தான்.இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இன்றளவும் உயர் கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த படிப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழிற்நுட்ப கல்வி இடங்களுக்கு நேரடி சேர்க்கையும், வேலைவாய்ப்புகள் சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்தும் பல்வேறு துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முயற்சியை கைவிடக்கூடாது. தோல்வி என்பது நிரந்தர தோல்வி அல்ல. தோல்வி அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு பாடம் மட்டுமே. நம் வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் கூட விடா முயற்சி செய்தால்; முன்னேறி விடலாம். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000/-, கல்விக்கடன், உதவித்தொகைகள் போன்ற நிறைய அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு மாணவர்களுக்காக செயல்படுத்துகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்வில் நீங்களும்உயரவேண்டும்,உங்களுடையகுடும்பத்தைநன்றாகபார்த்துக்கொள்ளவேண்டும்.உங்கள்வீட்டிற்கும்,ஊருக்கும்,நாட்டிற்கும்நல்லபெயரைஎடுத்துதரவேண்டும்எனதெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 511- க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News