லவ்லினா நிஹாத் ஜரீன் தேசிய குத்துச்சண்டை பைனலுக்கு முன்னேறினர்.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் உ.பி.,யில் முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.10 பிரிவுகளில் இந்தியாமுழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
அரையிறுதிபோட்டிகள் நேற்று ,51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை பதக்கம் வென்ற நிஹாத்ஜரீன், உ.பி.,யின் குசும் பஹலை 4:1 என்ற கணக்கில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.
அசாமின் லவ்லினா, 5:0 என உ.பி.,யின் இம்ரோஸ்கானை சாய்த்து, 75 கிலோ பிரிவு அரையிறுதியில் பைனலுக்கு முன்னேறினார். ஹரியானாவின் பூஜா ராணி (80 கிலோ), 5:0 என உ.பி.,யின் ஸ்நேகாவை வென்றார். மீனாட்ஷி ஹூடா (48), பிரீத்தி (54), அருந்ததி (70) மற்ற அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் 55 கிலோ பிரிவு அரையிறுதியில் சர்வீசஸ் வீரர் ஜடுமானி சிங், 5:0 என சகவீரர் அமித் பங்கலை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில்சர்வீசஸ் வீரர் நரேந் தர் (90+), பெட்ரோலிய அணியின் நமன் (90) வென்றனர்.
0
Leave a Reply