25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விருது விழா முடிந்தவுடனே பத்திரிகையாளர் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கிய நிலையில், ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கேட்டதற்காக பதில் அளிக்கிறேன் எனக்கூறிய கேத்தன் மேத்தா 4 - C தான் காரணம் என விளக்கி உள்ளார்.இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட்டுக்கான இன்ஜினை கண்டுபிடித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கு பதிலாக தேசதுரோகி என்கிற பட்டம் கிடைத்து பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். மேலும், தன்னை நிரபராதி என நிரூபிக்க நீதி போராட்டத்தையும் நடத்தி வென்றார்.அவரது வாழ்க்கை வரலாற்று கதையை படமாக இயக்கி அதில் நம்பி நாராயணனாகவே நடிகர் மாதவன் வாழ்ந்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், தமிழில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.சிறந்த படம் ராக்கெட்ரி: 69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கி, நடித்த மாதவனுக்கு தேசிய விருது வழங்கப்படும் என அறிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News