"என்னை பெண் இயக்குநர் எனச் சொல்லாதீர்கள்": இயக்குநர் மதுமிதா வேண்டுகோள்.
இயக்குநர் மதுமிதா, சமீபத்தில் 'லவ் ஆல்வேஸ்' என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
படம் குறித்து இயக்குநர் மதுமிதா கூறுகையில், "'ஜான்டோ' திரைப்படம் பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத அளவிலான வித்தியாசமான திரைக்கதையைக் கொண்டுள்ளது. நான் இயக்கிய 'லவ் ஆல்வேஸ்' தொடரும் அதுபோல ஒரு வித்தியாசமான முயற்சிதான். அடுத்ததாக ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். ஊடகங்களும் ரசிகர்களும் தயவுசெய்து என்னை 'பெண் இயக்குநர்' எனக் குறிப்பிடாமல், 'இயக்குநர்' என்று மட்டும் அழையுங்கள்" என்றார்.
0
Leave a Reply