மாங்காய் தொக்கு ( Mango Thokku )
தேவையானவை:
மாங்காய் - 2 பெரியது (துருவியது)
வற்றல் மிளகாய் தேவைகேற்ப
பெருங்காயம் 1 சிறு துண்டு
உப்பு -1டீஸ்பூன்
நல்லெண்ணெய் 1/2 கப்
வறுத்த வெந்தயப் பொடி 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
1 வெறும் கடாயில் வற்றல் மிளகாயை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய் துருவல், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும். இதை சுத்தமான ஜாடியில் வைத்து சுமார் 180 நாட்கள் உபயோகிக்கலாம்.
0
Leave a Reply