25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இறைச்சி உண்ணி தாவரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இறைச்சி உண்ணி தாவரங்கள்.

தாவரங்கள் சூரிய ஒளியில் இருந்து உணவை தயாரித்து கொள்கின்றன. ஆனால், சில வகை தாவரங்கள் பூச்சிகள், சிறிய இந்த வகை தாவரங்கள் கார்னிவோர்ஸ் அல்லது இறைச்சி உண் மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த அசைவ தாவரங்களானது, பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளில் கிடைக்கும் சுவையான ஊட்டச்சத்துக்களை உண்பதற்காக மிகவும் தந்திரமாக அவற்றை பிடித்து விடுகின்றன.

தாவரவியலாளர்கள் ஆராய்ச்சியில் சுமார் 630 வகையான இறைச்சி உண்ணி தாவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

இதில், பெரும்பாலானவை பூச்சிகள், மீன்கள், கொசு லார்வாச் கள் மற்றும் சிறிய மீன்களை உண்கின்றன. ஆனால், பெரிய அளவில் காணப்படும் தாவரங்களானது பாம்புகள் போன்ற ஊர்வன எலிகள் போன்ற உயிரினங்களை பிடித்து இறுக்கி, அவற்றை ஜீரணிக்கும் திறன் கொண்டவை.

இயல்பான தாவரங்கள் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில்  எல்லாம் வளரக்கூடியவை. இறைச்சி உண்ணி தாவரங்களின் வாழ்விடங்கள் என்பது அதன் உணவுகள் கிடைக்கும் சதுப்பு  நிலங்கள், நீர்நிலைகள், நீர்வழிகள், காடுகள் மற்றும் மணல் சார்ந்த இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. அண்டார்டிகா தவிர மற்ற கண்டங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் காணப்படுகின்றன.

இவ்வகைதாவரங்கள், தமக்கான இரையை பொறிகளில் இழுக்க  அதிக மணம் கொண்ட ஒரு வகை தேனை உற்பத்தி செய்கின்றன மேலும், இந்த தாவரங்கள் தன் இலைகளை பூக்கள் போன்ற வடி விலும் நிறத்திலும் மாற்றி அமைக்கின்றன.

இலையின் உள் நுனியில் வழுக்கும் திரவமும் காணப்படும். இதனை பூக்கள் என்று கருதி வரும் வண்டுகள், பூச்சிகள் இந்த இ லைகளின் உள்ளே வந்து சிக்கி மடிந்து போகின்றன. இயற்கையின் மர்மங்களில் இறைச்சி உண்ணி தாவரங்கள் அதிசயிக்கத் தக்க ஒன்றாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News