பால் பணியாரம் .
தேவையான பொருட்கள்-
1 கப் பச்சரிசி
1 கப் இட்லி அரிசி
1 கப் உளுத்தம்பருப்பு
தேவையான அளவு பொரிக்க எண்ணெய்
1 தேங்காய்
தேவையானஅளவு சர்க்கரை
3 ஏலக்காய்
செய்முறை -
முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசி மற்றும் பருப்பை கிரைண்டரில் சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
ஒரு முழு தேங்காய் துண்டுகளாக, தேவையான அளவு சர்க்கரை, மூன்று ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
பிறகு அரைத்த மாவை வாணலியில் எண்ணெய் காயவைத்து, சிறிய உருண்டை கரண்டியை வைத்து, சிறு சிறு பணியாரமாக உருண்டைகளாக ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பணியாரங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து பரிமாறவும்.சுவையான பால் பணியாரம் தயார்..
0
Leave a Reply