25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.16.60 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தினை  (18.11.2026) திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சசிகலா அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, புதிய பேருந்து நிலையத்தினைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலையில், நகரின் வளர்ச்சி, அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், வெளிமாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் பயணிகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் வசதிகளுடனும் இந்த புதிய பேருந்து நிலையம் ரூ.16.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.புதிய பேருந்து நிலையமானது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட  அத்திகுளம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்தின் தரைத்தளம் 3,601 சதுர மீட்டர், முதல் தளம்  34.50 சதுர மீட்டர் என 3,635.50 சதுர மீட்டர் கட்டிடப் பரப்பளவுடனும், 10,864.50  சதுர மீட்டர் பேருந்து வந்து செல்வதற்கான காலியிடம் என  மொத்தம்  14,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

  இப்பேருந்து நிலையத்தில்  30 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், 5 பயணிகள் காத்திருப்போர் அறைகள், 67 கடைகள், 2 உணவகங்கள், 2 கழிப்பறைகள்  உள்ளிட்ட வசதிகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, பேருந்துகள் சீராக வந்து செல்லவும், பயணிகள் பாதுகாப்பாகக் காத்திருந்து பயணம் மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் இப்பேருந்து நிலையம்  கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன்,  பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு மேம்பட்ட அடிப்படை வசதிகளை வழங்கவும், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இப்புதிய பேருந்து நிலையம் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும்,  கடைகள் மற்றும்  உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் வணிக நடவடிக்கைகளும் மேம்படுவதுடன், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நகரின் பொருளாதார வளர்ச்சிக்கும் இப்பேருந்து நிலையம் வழிவகுக்கும்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் திரு.ரவிக்கண்ணன், நகராட்சி ஆணையர் திரு.குமார், நகராட்சி பொறியாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News