தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கோவை KCT மாணவரின் ‘TRIKE 2N’.
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மாணவர் எஸ். ஷகீல் அக்தர் உருவாக்கிய ‘TRIKE 2N’ என்ற மின்சார வாகனம், 2026ஆம் ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதின் தேசியப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் (Runner-Up) பெற்றுள்ளது.
காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான ரோந்து நடவடிக்கைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மின்சார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம், தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
மாணவர் ஷகீல் அக்தரின் இந்தச் சாதனை, புதுமையான கண்டுபிடிப்புகளில் இளம் தலைமுறையினரின் ஆர்வத்தையும், இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்துகிறது.
0
Leave a Reply