25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அஜீரணக் கோளாறு,வயிற்றுக் கடுப்பு சரியாக்கும் ஓமம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜீரணக் கோளாறு,வயிற்றுக் கடுப்பு சரியாக்கும் ஓமம்!

ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும். 

 ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு. சித்தரத்தை, அக்கரகாரம் மற்றும் திப்பிலி வேர் பொடியை சம அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட, தொண்டையில் புகைச்சல் நீங்கும்.

ஓமம். சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.

ஓம கஷாயம் அருந்தினால், பசியை துாண்டும்.

ஜலதோஷம் குறைய, ஓமத்தை பொடித்து. உச்சந்தலையில் வைத்து தேய்க்கலாம்.

ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.

ஓம எண்ணெயை மூட்டு வலிக்கு தடவ, நாளடைவில் வலி குணமாகும்.

ஓம எண்ணெயை, பஞ்சில் தோய்த்து, பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால், வலி நீங்கும்.

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்க வேண்டும். உணவு உண்ட.. 20 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுக் கடுப்பு சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News