25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு செம்மொழி நாளான 03.06.2025 அன்று பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு செம்மொழி நாளான 03.06.2025 அன்று பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது

தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் ”தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர்  அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான  சூன் திங்கள் 3 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பெற்றுள்ளது.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும்  11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி 03.06.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  11,12 ஆம் வகுப்பு  பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 அன்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக  அலுவலகக்  கூட்ட அரங்கில்  நடத்தப்பெற உள்ளன.  

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து  அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் /பொறியியல்/  மருத்துவக் கல்லூரிகள்/ சட்டம் / வேளாண்மை /  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  பங்கேற்கலாம்.

ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு   பள்ளி / கல்லூரியிலிருந்து மொத்தம் 2 மாணவர்கள் மட்டும்  பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  ஒப்பத்துடனும் , கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடனும்   விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ,  அஞ்சல்  முலமாகவோ,  மின்னஞ்சல் - (tamilvalar.vnr@tn.gov.in)    முலமாகவோ  05.05.2025  க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 05.05.2025க்குள் பதிவு செய்பவர்கள் மட்டும் போட்டிக்கு அனுமதிக்கப்பெறுவர்

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் ” செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை”  சார்ந்து இடம்பெறும்.  தலைப்புகள் முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டா போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  பரிசுகளை வழங்கவுள்ளார்.   பள்ளி/ கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  முதல் பரிசு ரூ.10000,  இரண்டாம்பரிசு ரூ.7000-,  மூன்றாம் பரிசு ரூ.5000-  என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள்  வழங்கப்பட உள்ளன.

 மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும்  17.05.2025 அன்று சென்னையில்  நடைபெறும்  மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு  வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.10,000- மும் , மூன்றாம் பரிசாக ரூ.7,000- மும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News