25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தமிழ்நாடு பூமிதான வாரியத்தின் சார்பாக, நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுமனை விநியோகப் பத்திரங்களை அமைச்சர்கள்  வழங்கினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு பூமிதான வாரியத்தின் சார்பாக, நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுமனை விநியோகப் பத்திரங்களை அமைச்சர்கள்  வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (13.01.2026) தமிழ்நாடு பூமிதான வாரிய நிலத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் வசிக்கும் 23-நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு தலா ரூ.1 இலட்சத்து 72 மதிப்பில் மொத்தம் ரூ.39 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை விநியோகப் பத்திரங்களை வழங்கினர்.

நிலச் சீர்திருத்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு பூமிதான நில வாரியமானது, நிலக்கொடை இயக்கத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்களை முறைப்படுத்துவது, அவற்றின் உரிமையை வாரியத்தின் பெயருக்கு மாற்றுவது, மற்றும் அந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நில மறுபங்கீடு மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இந்த வாரியமானது நிலங்களை நிலமற்றவர்களுக்கு ஒதுக்குவதற்கும், சமூக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும், பட்டா மாற்றம் போன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொறுப்பாகும்.

அதனடிப்படையில், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் வசிக்கும் 23-நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு தலா ரூ.1 இலட்சத்து 72 மதிப்பில் மொத்தம் ரூ.39 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை விநியோகப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *