25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,834 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.86.96 கோடி மதிப்பிலான கடனுதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,834 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.86.96 கோடி மதிப்பிலான கடனுதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, மகளிர் சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  வட்டாரத்தில், 48 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.375.87 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  வட்டாரத்தில், 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.454.30 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.422.17 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.443.64 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 52  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.575.23 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 61 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.528.77 இலட்சம் மதிப்பிலும், நரிக்குடி வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.454.30 இலட்சம்  மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.421.75 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 61 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.639.89 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 63 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 512.14 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.625.50 இலட்சம் மதிப்பிலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 453 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 632 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 8027 மகளிர்களுக்கு ரூ. 60.28 கோடி மதிப்பிலும்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  நகராட்சியை சேர்ந்த 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.111.17 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  நகராட்சியை சேர்ந்த 45 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.700.43 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர்  நகராட்சியை சேர்ந்த 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.78.45 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி  மற்றும் திருத்தங்கல் நகராட்சியை சேர்ந்த 17 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.110.77 இலட்சம் மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியை சேர்ந்த 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.238.14 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியை சேர்ந்த  7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.117.94 இலட்சம் மதிப்பிலும்,

செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், கொடிக்குளம், சேத்தூர், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பேரூராட்சிகளைச் சேர்ந்த 41 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.429.9 இலட்சம் மதிப்பிலும், நகர்ப்புற அளவிலான  கூட்டமைப்பிற்கு 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 881 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 202 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2215 மகளிர்களுக்கு ரூ. 2667.79 கோடி மதிப்பிலும்,ஆக  மொத்தம் மாவட்டத்தில், ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 834 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10,242 மகளிர்களுக்கு ரூ.86.96 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

மேலும், ராஜபாளையத்தை சேர்ந்த பெண்மணி மணிமேகலை விருது பெற்றதை போல், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் இதுபோன்ற மேலும் பல விருதுகளை பெற வேண்டுமென மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.பெண்கள்  தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு,  தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப  பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள  வேண்டும்

இதன் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் வங்கி கடன் பெறுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சுமார் 100 கோடி அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் இந்த ஆண்டும் கூடுதலாக வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டும் அதிகமான கடனுதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் புதிய தொழில்களை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காகவும் வங்கி கடனோடு இருக்காமல், புதிய பயிற்சிகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பெண்களுக்கு இதுபோன்ற எத்தனையோ வாய்ப்புகள், சுதந்திரங்கள், விடுதலைகள் இருந்தாலும், உண்மையான விடுதலை என்பது அவர்களிடம் இருக்கக்கூடிய பொருளாதார விடுதலைதான். அதன் அடிப்படையில் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் வங்கி கடன் உதவிகள், புதிய பயிற்சிகள் எல்லாம் நீங்கள் பெற்று இன்னும் பொருளாதாரத்தில் வலிமை மிக்கவர்களாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News