25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


குறள் வார விழாவினை முன்னிட்டு,  திருப்பூரில் நடைபெறவுள்ள குறள் வினாடி – வினா போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குறள் வார விழாவினை முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறள் வினாடி – வினா போட்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஐய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள்வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது.  அவ்வறிவிப்பினை செயற்படுத்திடும்வகையில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசைநிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திடுமாறு அரசாணை வெளியிடப்பெற்றுள்ளது.

 திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழாவின் ஒருநிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி – வினா போட்டி நடைபெறவுள்ளன.  குறள்    வாரவிழாவின்      ஒருநிகழ்வாக    குறள் வினாடி – வினாப் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் / பணியாளர்கள், அரசு அலுவகத்தில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியார்களுக்கு மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத்தேர்வு (கொள்குறிவகை) 09.01.2026அன்று   பி.ப.2.00 மணிக்கு விருதுநகர்     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்காம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில்   நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள்   தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு   முன்னதாகவே வருகை புரிய வேண்டும்.

 இத்தேர்வில் அதிக   மதிப்பெண்பெறும் 30 பேர்களில் முதல் 9 பேர்கள் 3 பேர் கொண்ட   3 குழுக்களாக குறள் வினாடி-வினாப் போட்டியிலும் ஏனைய 21 பேர் குறள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்பெறுவார்கள். அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் போட்டிகளுக்கான நெறிமுறைகள் சுற்றறிக்கையாக அனுப்பப்பெற்றுள்ளன. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்கு உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர்   என்ற முகவரியிலும் 04562-225596 என்ற அலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வினாடி வினாப் போட்டியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                     

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News