நெல் கொள்முதல் செய்ய 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2024-2025 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதற்காக 13 கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன்கருதி திறக்கப்படுகிறது.
அதன்படிஇராஜபாளையமவட்டம்சேத்தூர்,தேவதானம்,முகவூர்,கோவிலூர்,மேலூர்துரைச்சாமியாபுரம்,அயன்கொல்லங்கொண்டான். ஜமீன்நல்லமங்களம், மேட்டுப்பட்டி வத்ராயிருப்பு வட்டம் கான்சாபுரம், தம்பிபட்டி, வத்ராயிருப்பு, சுந்தரபாண்டியம் மற்றும் காரியாபட்டி வட்டம் முஷ்டக்குறிச்சி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் செலுத்தப்படும். எனவே விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக தொலைபேசி எண். 04562-252607-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply