பாலக் கீரை அடை தோசை.
தேவையான பொருட்கள்
1கப் இட்லி அரிசி,1/2 கப் பச்சரிசி,1/2 கப் துவரம்பருப்பு,
1/4 கப் கடலை பருப்பு,1டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு,
பச்சை மிளகாய் அல்லது வத்தல் மிளகாய் தேவைக்கு,10-15 பாலக்இலைகள்,1/2 ஸ்பூன் பெருங்காய தூள்
உப்பு தேங்காய் எண்ணெய் தேவைக்கு,ஒரு துண்டு இஞ்சி
செய்முறை
முதலில் அரிசி, பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக்கவும்.
அதை மிக்ஸியில் இஞ்சி ,பச்சை மிளகாய், பெருங்காயம், சேர்த்து அரைத்த பிறகு கடைசியா பாலக் கீரை சேர்த்து அரைத்து எடுத்துக்கவும்.
அத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும்.மெல்லிசா அடை வார்க்கவும். சுத்தி தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்
அழகான பச்சை நிறத்தில் அருமையான சுவையில் பாலக் அடை தோசை தயார்... வெங்காயம், பூண்டு எதுவும் நான் சேர்க்க வில்லை.... விரும்பினால் சேர்த்தும் செய்யலாம்.... தக்காளி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
0
Leave a Reply