25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பனீர் பட்டர் மசாலா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்

பனீர் ஊற வைக்க :

200கி பனீர்

 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்

 1ஸ்பூன் மிளகாய் தூள்

1ஸ்பூன் சீரகத் தூள்

1ஸ்பூன் கரம் மசாலா தூள்

1ஸ்பூன் தனியா தூள்

 1/2ஸ்பூன் உப்பு

1ஸ்பூன் வெண்ணை பனீர் வறுப்பதற்கு

வதக்கி அரைக்க:

2ஸ்பூன் வெண்ணை,பெரிய வெங்காயம்-2,தக்காளி-4,

1துண்டு பட்டை,4கிராம்பு,2ஏலக்காய்,

4,5பல் பூண்டு ,1துண்டு இஞ்சி,6.7 முந்திரி

கிரேவி செய்வதற்கு:

2டேபிள் ஸ்பூன் வெண்ணை

2பிரிஞ்சி இலை, 1ஸ்பூன் மிளகாய் தூள்

 1ஸ்பூன் தனியா தூள்

 1ஸ்பூன் சீரகத் தூள்

1ஸ்பூன் கரம் மசாலா தூள்

1ஸ்பூன் கஸ்தூரி மேத்தி

சிறிதளவுபிரெஷ் கிரீம்

தேவையான அளவு உப்பு

செய்முறை 

முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அத்துடன் பொடிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் வதக்கியத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கினதும் அதனுடன் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் அதுவும் லேசாக வதங்கியதும் அதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.பனீர் வறுத்த கடாயிலேயே மீண்டும் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை தாளித்து பொடிகளை சேர்த்து லேசாக வருத்தவுடன் நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்து கலக்கவும்.

வெங்காய தக்காளி விழுதுடன் சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.. பன்னீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் இறுதியாக கஸ்தூரி மேதியையும் பிரஸ் கிரீமையும் சேர்த்து இறக்கவும்.இப்போது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News