கிளாசிக் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா ஆறு சுற்று முடிவில் இரண்டாவது இடத்தில்நீடிக்கிறார் .
கிளாசிக் செஸ் தொடர் லண்டனில் மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர்விளையாடுகின்றனர்.
இதன் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் ரொஜெனை எதிர்கொண்டார். பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்த முடிவில் 33 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் கிருஷ்ணன் ரித் விக், சகவீரர் பகத் குஷ்சை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் சந்தோஷ், பத்ரிநாத் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் வெலிமிர் இவிச் (5.0) உள்ளார்.
0
Leave a Reply