25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம்.

ராஜபாளையம் நகராட்சி மக்களுக்கு அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள 6வது மைல் எனும் நகராட்சி கோடைகால குடிநீர் தேக்கம் லேசான மழை ஆற்றில் பெய்தாலும் வரும் நீரை குடிநீர் தேக்கத் திற்கு திருப்பி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மொத்தம் 24 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி தற்போது 18 அடி உயரம் வரையே தண்ணீர் நிரப்பபடுகிறது. இந்நிலையில் சில நாட்களாக ராஜபாளையம்மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில்பெய்யும் மழையால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , நீராதாரம் நேற்று 18 அடி உயரத்தை எட்டியது. 

தொடர் மழையால் விவசாய பணிகள்  வேகம்.

 கடந்த இரண்டு வாரம் முன்பு பெய்த மழைக்குப்பின் ராஜபாளையம் சுற்று பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது . பலத்த காற்றும் சேர்ந்து வீசியதால் வயல்வெளிகளில் தண்ணீர் வேகமாக வற்றியதுடன் புதிதாக நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் வெயிலின்தாக்கம், வறண்ட காற்று இரண்டையும் தாங்க முடியாமல்  கருக தொடங்கின. நெல் சாகு படியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்கடந்தசில நாட்களாக மேக மூட்டத்துடன் தொடர் சாரல் மழை மேற்கு தொடர்ச்சி மலை பகு தியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன் மழைக்கான  அறிவிப்பும் வெளியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்., கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள்உழவு பணிகள், நிலத்தை பண்படுத்துவது, நடவுக்கு தயாராவது போன்ற விவசாய பணிகளை வேகம் எடுத்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *