ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் தென்காசி சாலை இணைப்பு ரோடு பணிகள் துவக்கம்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கொல்லம் தேசிய நெடுஞ் சாலையுடன் இணைப்பு ரோடு இல்லாததால் மெயின் ரோடு, நகர் பகுதி என அனைத்திலும் போக் குவரத்து நெரிசல் அதிக ரித்து வந்தது.இந்நிலையில் இணைப்புக்கான அறிவிப்பு2023ல் வெளியிடப்பட்டது. இதற்காக பெரியாதிகுளம், கடம்பன்குளம் பாசன விவசாய பகுதிகளில்100 அடி அகலத்தில்2.10 கி.மீ., தொலைவிற்கு நிலம் கையகப்படுத்தப் பட்டது.நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டது.புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பணி துவங்கிய நிலையில், கிழக்கு பகுதியான தென்காசி ரோடு வழியாக சாலை பணி தொடங்காமல் இருந்தது. மண் பாஸ் அனுமதி தாம தத்திற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விவசாய நிலங்களில் மண் கொட்டப்பட்டு பச்ச மடம் சுடுகாடு வரை சமப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.
முழுவதும் விவசாய நிலங்கள் வழியே செல்லும் இப்பாதைக்கு18 குறு பாலம்,1 சிறு பாலம் அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். மண் கொட்டப்பட்டு குறைந்தது5 அடி உயரத்தில் அமைய உள்ள சாலையால் மறுபக்கம் உள்ள பாசன பகுதிக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணிகளின் போதே தேவையான இடங்களில் குழாய்களை அமைத்து தடையற்ற பாசனத்திற்கு வழி காண வேண்டும். சாலையின் இரண்டு பக்கமும் உள்ள விவசாய நிலங்களுக்கான நீர் பாசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply