ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலை
வெம்பக்கோட்டை ரோட்டில் சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம் ராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே மேம்பாலம் அடுத்து உள்ள பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி வாகன போக்குவரத்து சாலையை ,மாநிலச்சாலையாகதரம்உயர்த்தினர்.ரயில்வேமேம்பாலம்முதல்பொன்னகரம்வரைஅதிககுடியிருப்புகளும், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், உள்ள 1.5 கி.மீ தொலைவு போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் இருந்த நிழல் தரும் மரங்களை அகற்றி வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியன் அமைத்தனர். மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் கடைகளின் தாழ்வாரங்கள், வாகன நிறுத்தம், மண்மேடிட்டு அடைப்பு, கடைகளின் விளம்பர பலகை என சாலையின் அகலமே சுருங்கிவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியின்றி பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் இன்னலுக்கு உள்ளாவது டன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். கண்டுகொள்ளாத அதிகாரிகளால் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலைக்கு மாறி உள்ளதுஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமான சாலையை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply