25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வாடகை ஒப்பந்தம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாடகை ஒப்பந்தம்

ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் , இந்தியாவைப் பொறுத்தவரை அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே அலைய வேண்டிய தேவை இருக்காது.

குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது, நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News