25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஓரியூரில் உள்ள சேயுமானார்  கோவில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓரியூரில் உள்ள சேயுமானார்  கோவில்.

மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் தன் அடியவர்களுக்காக 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அதில் விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்த்தியது ஓரியூரில் உள்ள சேயுமானார் என்னும் இத்தலத்தில் தான்.

விருபாட்சர், சுபவிரதை தம்பதிக்கு கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிவபக்தையான கவுரி திருமண வயதை அடைந்தாள். வைணவ இளைஞன் ஒருவனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் விருபாட்சர். அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவளை புறக்கணித்தனர்.

இளம் வயதிலேயே கவுரி முக்தியை வேண்டி சிவனை சரணடைந்தாள். ஒருநாள் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து விட்டு வெளியே சென்றனர். அந்த நேரத்தில் அடியவர் வடிவில் வந்த சிவன் அவளை விடுவித்தார். அடியவர் வடிவில் நின்ற சிவனுக்கு வயிறார உணவு அளித்தாள் கவுரி: குழந்தையாக மாறிய சிவன் அவளுக்கு முக்தி அளித்தார்.

குழந்தை வடிவில் காட்சியளித்த சிவனே இக்கோயிலில் மூலவராக இருக்கிறார்.1300 ஆண்டுக்கு முந்திய தலமான இது இயற்கை சீற்றத்தால் சிதிலமானது. திருப்பணி நடத்த முயற்சித்த போது அந்நிய மதத்தினரின் கெடுபிடியால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் திருப்பணியில் ஈடுபட்டு கோயிலை முழுமையாக்கினார் சிவபக்தையானபெங்களூரு அறம் வளர் நாயகி 

'ஓரியூரில் உகந்து இனிதருளிப் பாரிகும் பாலகன் ஆகிய பரிசும்' என இத்தலத்தில் சிவபெருமான் விருப்பமுடன் குடியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகர்.

சுவாமியின் பெயர்சேயுமானார், அம்பிகையின்பெயர்மட்டுவார்குழலியம்மை.பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நால்வர், பிரம்மா, *துர்கை சன்னதிகள் உள்ளன.இங்கு வழிபட்டால் இளமையுடன் வாழலாம்.குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News