25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


சிம்பிள் பியூட்டி சாய் பல்லவி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிம்பிள் பியூட்டி சாய் பல்லவி

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி கேரள நடிகை எல்லாம் கிடையாது.
தமிழ்நாட்டின் கோத்தகிரியின் பிறந்த பக்கா தமிழ் பொண்ணான சாய் பல்லவி உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்.
கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த  சாய் பல்லவிக்கு 31 வயசு ஆகுது: 1992ம் ஆண்டு மே 9ம் தேதி பிறந்த சாய் பல்லவி  தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். எத்தனை கோடிகள் சொத்து இருந்தாலும், எப்போதுமே மிகவும் எளிமையாக இருப்பதையே விரும்புபவர் சாய் பல்லவி. அவரது எளிமையே ரசிகர்களுக்கு அவரை பார்த்த முதல் நொடியிலேயே பிடிக்க வைத்து விடுகிறது. கவர்ச்சிகரமான ஆடைகள் எல்லாம் அணிந்து கொண்டு விழா மேடைகளுக்கு வர மாட்டார் சிம்பிளா ஒரு சுடிதார் அல்லது ஒரு சேலை போதும் அத்துடன் தனது புன்னகையை கலந்து சாய் பல்லவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

நடிகைக்கு முதலில் நடிப்பு மட்டும் தான் முக்கியம். நடிப்பு இருந்தாலே டாப் நடிகையாக வலம் வரலாம் என நிரூபித்து வெகு சில நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மருத்துவம் படித்து விட்டு நடிகைகளாக மாறியவர் பட்டியலிலும் சாய் பல்லவி இடம்பிடித்திருக்கிறார். ஹோம்லியாக நடித்து வந்த சாய் பல்லவி ரவுடி பேபியில் போட்ட கவர்ச்சி நடனம் ரசிகர்களை மெர்சலாக்கியது என்றே சொல்லலாம். ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி அந்த சூலத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட அப்படியே அம்மனே இறங்கி வந்து ஆடியது போல இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். கார்கி படத்தில் தப்பு செஞ்சது அப்பாவாவே இருந்தாலும், அவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை கடந்த ஆண்டு மீண்டும் நிரூபித்தார்.

அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். சாய் பல்லவி வீடு: பிறந்த ஊரான கோத்தகிரியில் ஒரு வீடு நடிகை சாய் பல்லவிக்கு உள்ளது. ஆனால், தற்போது குடும்பத்துடன் கோவையில் ஒரு சூப்பரான அழகிய வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சாய் பல்லவி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News