சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் (17.02.2075) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் 614 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.
0
Leave a Reply